Posts

Showing posts from March, 2025

முனை அமைப்பு பற்றி

Image
 முனை இளைஞர் இயக்கம்  முனை இளைஞர் இயக்கம் என்பது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2023 – 2024 காலத்தில் ஈரோடு மற்றும் திருப்பூரில் நடத்திய அறம் மற்றும் கற்பனைக் கல்வி பயின்ற கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது அரசியல் மதசார்பற்ற அமைப்பாகும்.  அறக்கல்வி குறித்து அறிய:  https://ethicaleducationtamil.blogspot.com/ தலைவர்: சிபி , 135, கோல்டன் சிட்டி, சிறுவலூர், கோபி, ஈரோடு, 638 054. கல்வி: BBA completed on April 2024,  Gobi arts and science college.  அழைப்பு எண்: 63835 69741.  மெயில்: mailtosibi19@gmail.com துணை தலைவர்: மெய்யரசு க.ச, 374/1,மருத்துவமனை ரோடு, கவுந்தப்பாடி, ஈரோடு கல்வி: Bsc.Cs.  completed on April 2024,  Gobi arts and science college.  செயலாளர்: அருள்ஜோதி , 8/55 வடக்கு தோட்டம் , வாணிப்புதூர் , ஈரோடு. 638 506.  கல்வி:  Ist year MCA, Gobi arts and science college.  துணை செயலாளர்: மேகவர்ஷினி. த 1/144, அண்ணா நகர் ,  கணக்கம்பாளையம், கோபி, ஈரோடு, 638 505.  கல்வி:  Ist year MCA, Gobi arts and s...

பதினாறாம் நாள்

Image
எங்கள் உடைகள் அனைத்தும் உமையாளிடம் உள்ளது. நேற்று முன்தினம் துவைப்பதற்காக வாங்கி சென்றது நேற்று மாலை ஈரம் காயாததால் கொண்டு வர இயலவில்லை. இன்று காலை கொண்டு வருவதாக சொல்லி இருந்தார்கள். எட்டு மணி வாக்கில் வந்து சேர்ந்தார்கள். எங்களுக்காக அதிகாலையா நள்ளிரவா என்று தெரியாத வேளை இரண்டு மணிக்கு எழுந்து உணவு சமைத்து எடுத்துக் கொண்டு நாலரை மணிக்கு கிளம்பி கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து வந்து சேர்ந்திருந்தார்கள். தற்செயலாக எங்களை பற்றி அறிந்து ஒரு வேளை உணவு கொடுக்க வந்தவர்கள் இன்று எங்களுடன் நீங்கா உறவாக மாறிவிட்டிருந்தார்கள். எங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக அணுக்கமாக தெரிந்து வைத்திருந்தார்கள். எப்போதும் அனு மற்றும் சௌமியாவிற்கு நெய் கலக்காத உணவு தனியாக செய்து கொண்டு வருவார்கள். வண்டி வந்ததும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை இறக்கி வைக்க நான் சென்றேன். கதவை திறந்து இறங்கி என்னை பார்த்த முதல் கணம் என் முகம் சரியில்லை என்று உமையாள் கண்டு விட்டார். ஒரு கணம் கூட தாமதிக்காமல் “ஏ ஒரு மாதிரி இருக்க என்ன ஆச்சு” என்று கேட்டார். நான் “ஒன்றும் இல்லை” என்று முகத்தை எப்போது...

பதினைந்தாம் நாள்

Image
காலை 8 மணிக்கு ஆலங்குடியில் இருந்து பயணம் தொடங்கியது. மேஜர் கோகுல் பெங்களூரில் இருந்து சரியாக நாங்கள் கிளம்பும் நேரத்திற்கு வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். வெயில் நடையில் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு முழுக்கை வெள்ளை பனியன் , தலைக்கு ஒரு கைக்குட்டை , கால் வலிக்கு எண்ணை என்று பல முன்னேற்பாடுகளுடன் தான் வந்திருந்தார். ஆலங்குடியிலேயே காலை உணவு. அங்கிருந்து கிளம்பி மடத்திக்காடு என்னும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினோம். கோகுல் எங்களுடன் நடக்க வந்தவர் போலவே தெரியவில்லை எங்கோ முன்னால் நடந்து சென்று கொண்டு இருந்தார். ஒரு பெட்டிக் கடையில் திண்பண்டங்களையும் தண்ணீர் புட்டிகளையும் வாங்கிக் கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தவரை நோக்கி நாங்களும் வேகத்தை கூட்டிச் சென்றோம். மண்டையை பிளக்கும் வெயில். முகத்தில் தீ பற்ற வைத்தது போல் எரிந்து கொண்டு இருந்தது. இத்தனை நாட்களில் கடுமையான வெயில் இன்று தான். உடலில் இருந்த ஒவ்வொரு துளி ஆவியையும் சூரியன் உறிஞ்சிக் கொண்டு இருந்தது. நான் துண்டை முகம் முழுவதும் சுற்றி மூடிக் கொண்டு அதன் சிறு துளைகள் வழியாக பார்த்துக் கொண்டு சென்றேன். சபரீஷ் ஒரு கருப்பு கண்ணாடி வைத்திருந...