400 கி.மீ நடைபயணம்
400 கி.மீ நடைபயணம் முனை அமைப்பு தொடங்கிய குறுகிய காலத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, நேர்மையான இரண்டு அரசு ஊழியர்களுக்கு விருது, ஒரு நாள் நேர்மை என்று நிறைய செயல்களை புரிந்து வருகிறது. அடுத்த திட்டமாக ஒரு பாத யாத்திரை ஒன்றை மேற்கொள்ளப் போகிறோம். போத்தனூர் என்னும் ஊரில் காந்தி வந்து தங்கிய ஒரு இடம் இன்று அவரின் நினைவகமாக உள்ளது. அங்கு தொடங்கி காந்தியின் கட்டளையை ஏற்று ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட வேதாரண்யத்தில் முடிக்க இருக்கிறோம். இது கோவை, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி சுமார் 400 கிலோமீட்டர் கொண்ட நடைபயணம். நேர்மையாக வாக்களித்தல் என்னும் விழுமியத்தை முன்வைத்து காந்தி சென்ற இடங்கள் சிலவற்றின் வழியாக இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி திண்டுக்கல் காந்தி கிராமம் வழியாக சென்று அங்கு கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்களுடன் ஒரு நாள் தங்கிவிட்டு செல்லுமாறு திட்டமிட்டு உள்ளோம். இப்போதைக்கு ஒரு ஆண் நான்கு பெண்கள் என்று மொத்தம் ஐந்து பேர் உள்ளோம். இது கூடவும் குறையவும் வாய்ப்புள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி மாலை சு...