400 கி.மீ நடைபயணம்

400 கி.மீ நடைபயணம் 


முனை அமைப்பு தொடங்கிய குறுகிய காலத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, நேர்மையான இரண்டு அரசு ஊழியர்களுக்கு விருது, ஒரு நாள் நேர்மை என்று நிறைய செயல்களை புரிந்து வருகிறது. அடுத்த திட்டமாக ஒரு பாத யாத்திரை ஒன்றை மேற்கொள்ளப் போகிறோம். போத்தனூர் என்னும் ஊரில் காந்தி வந்து தங்கிய ஒரு இடம் இன்று அவரின் நினைவகமாக உள்ளது. அங்கு தொடங்கி காந்தியின் கட்டளையை ஏற்று ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட வேதாரண்யத்தில் முடிக்க இருக்கிறோம். இது கோவை, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி சுமார் 400 கிலோமீட்டர் கொண்ட நடைபயணம். நேர்மையாக வாக்களித்தல் என்னும் விழுமியத்தை முன்வைத்து  காந்தி சென்ற இடங்கள் சிலவற்றின் வழியாக இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி திண்டுக்கல் காந்தி கிராமம் வழியாக சென்று அங்கு கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்களுடன் ஒரு நாள் தங்கிவிட்டு செல்லுமாறு திட்டமிட்டு உள்ளோம்.

இப்போதைக்கு ஒரு ஆண் நான்கு பெண்கள் என்று மொத்தம் ஐந்து பேர் உள்ளோம். இது கூடவும் குறையவும் வாய்ப்புள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி மாலை சுமார் 4 மணிக்கு தொடங்கி ஜனவரி 30 வரை அதிகபட்சமாக 20 நாட்கள் இந்த யாத்திரை இருக்கலாம். நாங்கள் செல்லும் வழியில் உள்ள கிராமங்களை முன்கூட்டியே பார்த்து எந்த இரவு எங்கு தங்கப் போகிறோம் என்று திட்டமிடுகிறோம். இந்த பயணம் முழுக்கவே யாரென்றே தெரியாத கிராம மக்களின் வீட்டில் தங்கி அவர்களிடமே உணவு பெற்று கொண்டு செல்லப் போகிறோம். தங்கும் ஊர்களில் பிரச்சாரமும் செய்யப் போகிறோம். 

அனைத்து நாட்களுமே வெளியே சாப்பிட்டு, வெளியே தங்கி சென்றால் ஐந்து பேருக்கு நாங்கள் கணக்கிட்டுப் பார்த்ததில் மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் நாங்கள் கிளம்பும் போது அதிகபட்சமாக ஒருவேளை சோற்றையும் 10000 ரூபாய் பணமும் மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடங்க உள்ளோம். தமிழகம் எங்களை கைவிட்டு விடாது என்ற நம்பிக்கையில் பயணப்படுகிறோம்.

ஒருவேளை நன்கொடைகள் வந்தாலும் அதிகபட்சமாக மொத்த செலவில் கால்வாசி தொகையான 25,000 ரூபாய் வரை மட்டுமே ஏற்போம். அதுவும் மக்கள் எங்களுக்கு உணவும், உறைவிடமும் அளித்து விட்டால் இந்த யாத்திரை முடிந்து அந்த பணத்தை முழுவதும் அளித்தவர்களுக்கே திருப்பி அளித்து விடுவோம். நாங்கள் எந்த இரவு எங்கு இருப்போம், ஒவ்வொரு நாளும் எந்த எந்த ஊர்களை கடக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்து விடுவோம். தினமும் சமூக வலைதளங்களில் அன்றைய நிகழ்வுகளை அறிவித்தபடியே செல்வோம். தினமும் எங்கள் வலைப்பூவில் பதிவும் எழுதப் போகிறோம். 

ஒரு விழுமியத்தை முன்வைத்து பாதயாத்திரை என்பது பெரிதும் நிகழ்த்தப்படாத ஒன்று. நாங்கள் அதை நிகழ்த்தப் போகிறோம். இதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கிறோம். எங்களுக்கு ஆதரவு அளிக்க தமிழக மக்களை அழைக்கிறோம். 

இந்த நடையில் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியிலோ எங்களுடன் இணைந்து நடக்க மக்களை, கல்லூரி மாணவர்களை அழைக்கிறோம்.


 பங்கேற்பாளர்கள்:

1. சிபி, completed BBA on April 2024, Gobi arts and science college. 

அலைபேசி: 63835 69741 



2. அனு ஸ்ரீ, முதலாமாண்டு LLB, SKP சட்டக் கல்லூரி, திருவண்ணாமலை.  

அலைபேசி: 90251 65842 


 

3. சௌமியா ஸ்ரீ, முதலாமாண்டு LLB, அரசு சட்டக் கல்லூரி, கோவை. 

அலைபேசி: 99657 04414 



4. அர்ச்சனா, இரண்டாம் ஆண்டு இளங்கலை கணிதம், சிக்கண்ணா கலைக் கல்லூரி. 
அலைபேசி: 96007 05171 



5. லைலா பானு, இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளியல், கோபி கலைக் கல்லூரி. 

அலைபேசி: 98944 64092 


6. கௌதம், completed Bsc. Maths on April 2024, Gobi arts and science college. 

அலைபேசி: 63748 79199



 தேவைப்படும் உதவிகள்:

       125,000 ரூபாய் கையிருப்புத் தொகை

       2. தங்கும் ஊர்களில் தங்குமிட தொடர்புகள்

       3. உணவு, உடை 

       4. முதுகுப் பை 

       5. காலணிகள் 

       6. பிற பயண உதவிகள்

      

      சிபி, முனை இளைஞர் இயக்கம், ஈரோடு. 

      63835 69741 

      Insta page: https://www.instagram.com/munai_org?igsh=MTQ3aTg2MHB3d2k5bA==

youtube channel: https://youtube.com/@munaiorg?si=ycJPdKfvbecYEjol

X / Twitter page: https://x.com/Munai_org?t=qTdPmumSsGJhxxsggJ1JoQ&s=09


உத்தேச வரைபடம்: https://maps.app.goo.gl/suRia97kFH8W7n5R9

உத்தேச தங்குமிடங்கள்:

வ. எண்

தேதி

தங்கும் ஊர், மாவட்டம்

கி. மீ

1

11.01.2025

பச்சப்பாளையம், கோவை  

12

2

12.01.2025

செஞ்சேரி, கோவை 

17 

3

13.01.2025

பேட்டைக் காளி பாளையம், திருப்பூர் 

23

4

14.01.2025

கொலிஞ்சிவாடி/ தாராபுரம், திருப்பூர்.

23

5

15.01.2025

கள்ளிமந்தையம், திண்டுக்கல்  

24

6

16.01.2025

அரசமரத்துப்பட்டி, திண்டுக்கல்  

23

7

17.01.2025

காந்தி கிராமம், திண்டுக்கல்  

28

8

18.01.2025

காந்தி கிராமம், திண்டுக்கல்  

0

9

19.01.2025

ராஜக்காபட்டி,  திண்டுக்கல்  

23

10

20.01.2025

புதர்,  திண்டுக்கல்  

19

11

21.01.2025

துவரங்குறிச்சி, திருச்சி

23 

12

22.01.2025

கரையூர்/ வெள்ளகுடி ஐ டி , புதுக்கோட்டை

27

13

23.01.2025

புதுக்கோட்டை

25

14

24.01.2025

மேளப்பட்டி ரசியமங்கலம், புதுக்கோட்டை

23

15

25.01.2025

மடத்திக்காடு, தஞ்சாவூர்

25

16

26.01.2025

துவரங்குறிச்சி, தஞ்சாவூர்

23

17

27.01.2025

இடும்பாவனம், தஞ்சாவூர்

26

18

28.01.2025

வேதாரண்யம், நாகப்பட்டினம்.

30

மொத்தம் கி. மீ

403  




Comments

  1. ஆச்சரியமாகவும் மனநிரைவாகவும் உள்ளது உங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்
    நன்கொடைக்கு வங்கி கணக்கு குறிப்பிடவில்லை

    முனை அமைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  2. அருமையான முயற்சி. தங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். முனை அமைப்பு மென்மேலும் பல சிறப்புகள் பெறட்டும்.

    ReplyDelete
  3. பயணம் சிறக்கட்டும். எடுத்த பணி சிறப்பு.
    வாழ்த்துக்கள்.
    பயணத்தில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  4. All the very best, take care and safe travel

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அறப்போர் ஜெயராம் நேர்காணல்

ஏழாம் நாள்