முதல் நாள் நடை - சரண்யா
நடைப்பயணம் ஒவ்வொரு நாளையும் குறித்து தொடர்ச்சியாக munai.in வலைப்பதிவில் சிபி பதிவேற்றி வருகிறார். என்னதான் ஒரே பயணமாக ஒன்றாக நடந்தாலும், ஒவ்வொருவருக்கும் அந்த பயணம் அளிப்பது வேறு தான். அதனால் தான் எல்லோரையும் எழுதும்படி வலியுறுத்தியும் வருகிறேன். நெடுநாட்கள் நீண்ட தூர நடைப்பயணம் குறித்த ஆசை இருந்தது. 2018 இல் Forrest Gump திரைப்படம் பார்த்தது முதல். அதுவே, இந்த பயணத்தில் நான் கலந்து கொண்டதன் நோக்கம், திறந்த வானின் கீழ் வெகு நேரம் இருக்கும் வாய்ப்பும், அது அகத்திற்கு என்ன அளிக்கும் என்பது தான். அறம் கல்வி மாணவர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. பெருந்தலையூரில் அவர்கள் வாக்குக்கு கை நீட்டாதீர்கள் என்ற கோரிக்கையை முன் வைத்து வெற்றி கண்டதின் அனுபவம் குறித்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதை தலைமை ஏற்று நடத்திய அனு ஶ்ரீ இந்த பயணத்தில் இணைந்திருக்கிறார். நடைப்பயணம் முழுதாக செல்வதா பாதி செல்வதா என்று எல்லா சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து கடைசியில் சனிக்கிழமை முதல் ஐந்து நாள் பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்ற முடிவு எடுத்திருந்தேன். வீட்டில் நடைப்ப...