தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் தொகுப்பேடு

இந்த தொகுப்பேட்டின் நோக்கம்:

தமிழகம் எங்கும் உள்ள தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு இடையே ஒரு தொடர்பை உருவாக்கித் தருவது.

அருணா ராய் 

 தன்னார்வ அமைப்புகள்

 தகுதிகள்:

       ·    இந்த தொகுப்பேட்டில் அரசியல் சார்பற்ற, லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்புகளின் விபரங்கள் மட்டுமே இடம்பெறும்.

       ·       சமூக மாற்றத்திற்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சேவை அமைப்புகள் ஆகிய இரு வகைகளில் அமைப்புகள் பிரிக்கப்படும். சமூக மாற்றத்திற்காக ஒரு லட்சியத்தை முன்வைத்து இயங்கும் அமைப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். 

       ·       இந்த தொகுப்பேட்டில் இடம்பெறும் அமைப்பு தரமானது தான் என முனை இளைஞர் இயக்கம் உறுதியளிக்கிறது

 

விதிகள்:

      1.     அரசால் தடை செய்யப்பட்ட அமைபாக இருக்கக் கூடாது.

      2.     2025 இல் குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும். அல்லது ஆறு நிகழ்வுகளை நிகழ்த்தி இருக்க வேண்டும்.  

      3.     பெருநகரங்கள் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சம் ஐந்து அமைப்புகள் இடம்பெறும்.

      4.     பிற மாவட்டங்களில் அதிகபட்சம் இரண்டு அமைப்புகள் இடம்பெறும்.

      5.     குறைந்தபட்சம் அந்த அமைப்பில் பத்து பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

      6.     கொடுங் குற்றங்களில் ஈடுபட்டவர்களாக அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மீது வழக்கு இருக்கக் கூடாது.

      7.     பெரு நிறுவனங்களின் பின்புலம் இருந்தால் அவை குறிப்பிட்டு காட்டப்படும்.

      8.     தொகுப்பேட்டில் இடம்பெறும் அமைப்புகள், முனை அமைப்பால் நேரில் சென்று ஆய்வு மேற்ககொள்ளப்படும்.

      9.     ஆண்டு வரவு செலவு நிதிகளை வெளிப்படையாக தெரிவிக்கும் அமைப்புகள் மட்டுமே இடம் பெறும்.

     10.  மதிக்கத்தக்க அமைப்பு, தன்னார்வலர் சிபாரிசு கருத்தில் கொள்ளப்படும். 

     11.  சுயவிளம்பரம், புகழ் பெறுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டிருத்தல் கூடாது. 

     12.  இரண்டாண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்து இந்த தொகுப்பேடு புதுப்பிக்கப்படும்.


தன்னார்வலர்கள் 


தகுதிகள்:

       ·       இந்த தொகுப்பேட்டில் அரசியல் சார்பற்ற, லாப நோக்கமற்ற தன்னார்வலர் விபரங்கள் மட்டுமே இடம்பெறும்.    

       ·       இந்த தொகுப்பேட்டில் இடம்பெறும் தன்னார்வலர் தரமானவர் தான் என முனை இளைஞர் இயக்கம் உறுதியளிக்கிறது.

விதிகள்:

     1.     2025 இல் குறைந்தது ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும்.

     2.     பெருநகரங்கள் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சம் ஐந்து பேர்  இடம்பெறுவர்  பிற மாவட்டங்களில் அதிகபட்சம் இரண்டு பேர் இடம்பெறுவர்.

     3.     பிற அமைப்புகளில் இணைந்து செயல்பட்டவராக இருந்தால் அதற்கு தடை இல்லை.

     4.     கொடுங் குற்றங்களில் ஈடுபட்டவராக அவர் மீது வழக்கு இருக்கக் கூடாது.

     5.     பெரு நிறுவனங்களின் பின்புலம் இருந்தால் அவை குறிப்பிட்டு காட்டப்படும்.

     6.     தொகுப்பேட்டில் இடம் பெரும் தன்னார்வலர்கள், முனை அமைப்பால் நேரில் சென்று பேட்டி எடுக்கப்படுவார்கள்.

     7.     ஆண்டு வரவு செலவு, சொத்து இவற்றை வெளிப்படையாக தெரிவிக்கும் நபர் மட்டுமே இடம்பெறுவர்.

     8.     அறப்பிரச்சனைக்கு குரல் கொடுத்து சிறை சென்றிருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

     9.     ஏற்ற லட்சியத்திற்காக தனி வாழ்க்கையில் இழப்புக்களை சந்தித்து இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

     10.  மதிக்கத்தக்க அமைப்பு, தன்னார்வலர் சிபாரிசு கருத்தில் கொள்ளப்படும். 

     11.  சுயவிளம்பரம், புகழ் பெறுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டிருத்தல் கூடாது. 

     12.  இரண்டாண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்து இந்த தொகுப்பேடு புதுப்பிக்கப்படும்.

 

Comments

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்

ஏழாம் நாள்