முந்தைய செயல்பாடுகள்

இதற்கு முன்பு யான் அறக்கட்டளையின் நிதி நல்கையில் சில பணிகளை ஆற்றினோம். அதில் ஒன்று கீழ்கண்டது. ஜனநாயக சோதனை அறிக்கை - பெருந்தலையூர் " ஒரு வீட்டை மாற்றுவதை விட எளிது ஒரு தெருவை மாற்றுவது" இது துவங்கியது குடியரசு நாளான 2024 ஜன 26 அன்று. முதலில் ஊரை தூய்மை படுத்துகிறோம் என துவங்கினோம். 20 பேர் கொண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் குழு முன் வந்தது. இவர்கள் யான் அறக்கட்டளை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் உதவித் தொகையுடன் கூடிய அறக் கல்வி வகுப்பில் பயிலும் மாணவர்கள். இவர்கள் பல்வேறு சிந்தனைப் பயிற்சி வகுப்புகள் , களப் பணிகள் , பயிற்சி முகாம்களில் கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்றவர்கள். கோபி கலைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் அனு ஸ்ரீ என்கிற மாணவியின் வீடு பெருந்தலையூரில் இருந்து சுமார் 50 கிமீ. அவர் பெருந்தலையூரில் தங்கி பணிகளை ஒருங்கிணைப்பது என முடிவானது. இதே கல்லூரியில் படிக்கும் சிபி என்கிற இன்னொரு மாணவர் இந்த குழுவை ...