Posts

Showing posts from February, 2025

தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் தொகுப்பேடு

Image
இந்த தொகுப்பேட்டின் நோக்கம்: தமிழகம் எங்கும் உள்ள தன்னார்வ அமைப்புகள்,  தன்னார்வலர்களுக்கு  இ டையே ஒரு தொடர்பை உருவாக்கித் தருவது. அருணா ராய்   தன்னார்வ அமைப்புகள்  தகுதிகள்:        ·     இந்த தொகுப்பேட்டில் அரசியல் சார்பற்ற, லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்புகளின் விபரங்கள் மட்டுமே இடம்பெறும்.        ·        சமூக மாற்றத்திற்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சேவை அமைப்புகள் ஆகிய இரு வகைகளில் அமைப்புகள் பிரிக்கப்படும். சமூக மாற்றத்திற்காக ஒரு லட்சியத்தை முன்வைத்து இயங்கும் அமைப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்.          ·        இந்த தொகுப்பேட்டில் இடம்பெறும் அமைப்பு தரமானது தான் என முனை இளைஞர் இயக்கம் உறுதியளிக்கிறது   விதிகள்:       1.      அரசால் தடை செய்யப்பட்ட அமைபாக இருக்கக் கூடாது.       2.      2025 இல் குறைந்...

400 கி.மீ நடைபயணம்

Image
400 கி.மீ நடைபயணம்  வாக்குக்கு பணம் என்பது தமிழகம் முழுக்கவே உள்ளது. மக்களிடத்தில் இது போன்ற ஊழல் மண்டிக் கிடக்கிறது. அது ஒட்டுமொத்த சமூகத்தின் நேர்மையை கேள்வி கேட்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெரும்பாலானவர்கள் அதை ஊழல் என்றே உணர்வது இல்லை. சிலர் அவர்களுக்கு இருக்கும் குற்ற உணர்வை மறைப்பதற்காக தங்களுக்கு தாங்களே நொண்டி சாக்குகளை சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு எதிராக ஒரு இயக்கமாக செயல்பட்டு முற்றிலும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் பெருந்தலையூர் என்னும் கிராமத்தில் 2024 மக்களவை தேர்தலில் இந்த ஊழலுக்கு எதிரான ஒரு ஒன்றரை மாதம் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் 75 சதவீதம் பேர் பணம் வாங்காமல் இருந்து அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.  பெருந்தலையூர் பணி   11.01.2025 முதல் 28.01.2025 வரை 18 நாட்கள் இதே நோக்கத்தை முன்வைத்து காந்தி வந்து தங்கி இன்று அவருடைய நினைவாகமாக உள்ள கோவை பொத்தனூரில் தொடங்கி திண்டுக்கல் காந்தி கிராமம் வழியாக ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யம் வரை மொத்தம் 400 கிலோமீட்டர் நடந்து பிரச்சாரம் செய்துள்ளோம். ...

நான்காம் நாள் நடை - சரண்யா

Image
பேட்டைக்காளிப் பாளையத்தில் இருந்து நாங்கள் காலையில் தாமதித்து தாராபுரம் நோக்கி கிளம்பினோம். வழியில் சில கிராமங்களில் மக்களுடன் பேசியபடி வந்தோம். சில வார்த்தைகளுக்கு மேல் நான் எதுவும் பேச முடியாமல் திணறினேன். பசி, ஒரு நாள் கூலி என்று சொன்னார்கள். சிபி மேற்கொண்டு பேசினான். பாவக்காசு உங்களுக்கு நிம்மதி அளிக்குமா, அதை வாங்கும் ஒருவரையும் வாங்காத ஒருவரையும் நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் அமைதி காத்தனர். அதன் பின்னர், என்னென்ன மாதிரியான எதிர்வினைகள் பொதுவாக வரும் என்று சிபி எனக்கு விளக்கிக் கொண்டு வந்தான்.    நேரம் செல்லசெல்ல வழியில் இரு பக்கம் இருந்த தென்னந்தத் தோப்புகள் குறைந்து மஞ்சள் பூக்கள் கொண்ட புதர்ச்செடிகளும் முட் செடிகளும் வரத் தொடங்கின. உப்பாறு அணையின் கரையை அடைந்தோம். நீர் நிரம்பி இருந்தது. மடையான்கள், வெள்ளை கொக்குகள் அதிகம் இருந்தன. நாங்கள் வெயில் தாங்காமல் கரையில் இருந்து சீக்கிரமே இறங்கிவிட்டோம். அணைக்கு செல்லும் வழியில் இரண்டு எருமைகள் எங்கள் ப்ளூ டூத் ஒலிப் பெருக்கிக்கு மிரண்டு எழுந்து வயலுக்குள் நின்றன. இந்த எருமைகள் நல்ல கம...

மூன்றாம் நாள் நடை - சரண்யா

Image
முதல் இரண்டு நாட்களும் வழி மாறி சென்றமையால் திட்டமிட்டதை விட 5 கி.மீ ஆவது கூடுதலாக நடந்து இருப்போம். இந்த முறை, எங்களுக்கு தங்கும் இடம் வழங்கிய செல்வராஜ் அவர்களே வழியைக் கச்சிதமாக சொல்லிவிட்டார். கூகுளும் அதையே காட்டியது.  அன்று போகிப்பண்டிகை. எங்கள் உறவினர் கிராமங்களில், காய்ந்த சருகுகள் மட்டைகள் எல்லாம் சேர்த்து ஆள் உயரத்தில் தீ மூட்டி அதை சுற்றி வந்து மேளம் கொட்டி விளையாடுவார்கள். எங்கள் வீட்டில் குறைந்த பட்சம் ஒரு கொட்டாங்குச்சி, அதற்கு மேல் உபயோகப்படுத்த முடியாத பழைய மூங்கில் பாயாவது கொலுத்துவோம். இந்த முறை கிராமங்களில் செல்வதால் என் எதிர்ப்பார்ப்பு கூடி இருந்தது. எல்லா வீடுகளும் சிமெண்ட் தரைமேல் சாணி மெழுகி பளிச்சென்று இருந்தது. போகிப் பண்டிகைக்கான எந்த தடயமும் காணவில்லை. பழைய பொருட்களைக் கொளுத்தும் வழக்கம் இவர்களுக்கு இல்லையாம். வேப்பம் கொழுந்து பூக்கள் முதலியவை சேர்த்து வீட்டில் கட்டுவார்களாம். இரவு பெய்த மழையில் எங்கள் துணிகள் காயாமல் ஈர ஆடைகள் மேலும் எடையைக் கூட்டின. வெயில் இல்லாத ஈரமான சாலைகள்.  அன்றும் பெரும்பகுதி தோப்புகள் வழியாகத் தான் சென்றோம். அர்ச்...

பன்னிரண்டாம் நாள் - சிபி

Image
  ஜனவரி 22 ஆம் தேதி காலை திருச்சியிலுள்ள துவரங்குறிச்சியில் இருந்து துண்டு பிரசுரங்களை கொடுத்தபடியே நடக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஒருவர் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு டீ குடிக்கும் படி அழைத்தார். அவருடைய நண்பர்கள் சிலரும் வந்து பேசினர். கொஞ்ச நேரம் மிகவும் பரபரப்புடன் பேசிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்து வருகிறோம் , எங்கு செல்கிறோம் , இறுதி நாள் விழா என்றைக்கு என்று பல கேள்விகளை கேட்டு அவசர அவசரமாக ஏற்கனவே அவை குறிப்பிட்டிருக்கும் துண்டு பிரசுத்தில் மீண்டும் எழுதினார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போதே அவர் மீண்டும் அதை எடுத்து பார்க்கப் போவது இல்லை என்று எனக்கு தோன்றியது. அங்கிருந்து ஒரு குறுகிய சந்து வழியாக, கண்டபடி வளைந்து வீடுகளுக்கு நடுவில் வழி சென்றது. இதுவும் வீட்டு மனை சந்துகளுக்குள் செல்வதால் முட்டுச் சந்தாக முடிந்துவிடுமோ என்று பயந்து கொண்டே தான் நடந்து வந்தேன். ஆனால் நல்ல வேளையாக சந்துகளை தாண்டி பெரிய சாலையில் வழி சென்று முடிந்தது. இம்முறை அவ்வாறு முட்டுச் சந்தாக முடிந்தாலும் நான் பயப்படத் தேவையில்லை. வழி பார்க்கும் பொறுப்பு முழுவதும் ...

இரண்டாம் நாள் நடைபயணம் - சரண்யா

Image
இரண்டாம் நாள் காலை 6:30 மணிக்கே ஊருக்குள் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு 7:30 மணிக்குள் கிளம்பி விட வேண்டும் என்பது திட்டம். இரவில் சிலர் தூக்கத்தில் பேசியபடி இருந்தனர். குறட்டை ஒலியும் கூட. எல்லோருக்கும் அவற்றை மீறி நல்ல தூக்கம். காலை 5 மணிக்கே எழுந்து நான், லைலா, அர்ச்சனா குளித்து தயாராகி விட்டோம். பிற நால்வரும் தயாராவதற்குள், அர்ச்சனாவின் பையில் இருக்கும் எடையை பகிர்ந்துக்கொள்ள, ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்தோம். உள்ளே ஒரு சந்தைக்கடை இருந்தது. சுய-கவனிப்பு பராமரிப்பு (Self care routine) பொருட்கள் ஒவ்வொன்றும் 150 கிராம் என்ற கணக்கிட்டால் கூட கிலோ கணக்கில் இருக்கும். அரை டஜன் கைக்குட்டைகள், துணி துவைக்கும் ப்ரஷ், வேஸ்லின் சிறிய பேக் மற்றும் பெரிய பேக், ரஃப் யூஸ் துணிகள், இன்ன பிற. இதில் தேவையற்றதை நீக்கலாம் என்றால் எல்லாமும் வேண்டும் என்கிறாள். லைலா comfort bottle வைத்திருந்தாள். இது எல்லாம் சாம்பிள் பேக் வாங்கி கொள்ளலாம் எடை குறையும் என்றால், "இதுலா கண்டிப்பா வேணும்" என்கிறாள். அனு  ஒரு இளஞ்சிவப்பு நிற மென் தலையணையைத் தூக்கி வந்திருந்தாள். "அக்கா, என்கிட்ட இருக்க எத வ...