பதினேழாம் நாள்
துவரங்குறிச்சியில் பாலு என்பர் வீட்டில் தங்கி இருந்தோம். கடைசி நாள் நடக்க வேண்டிய தூரத்தை குறைத்தால் நிறைவு விழாவில் பங்கேற்பது எளிதாக இருக்கும் என்று இன்று கூடுதல் கிலோமீட்டர் நடப்பதாக திட்டம். அதனால் இயன்றவரை சீக்கிரம் கிளம்பலாம் என்று தயாராகிவிட்டோம். அப்போது ஒருவர் இங்கு ஒரு காந்தி சிலை உள்ளது அதற்கு மாலை அணிவித்து விட்டு பயணத்தை தொடங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து முக்கிய சாலையில் இருந்த அந்த காந்தி சிலை இருக்குமிடத்திற்கு சென்றோம். சிமின்டால் செய்யப்பட்டு மெழுகு பூசப்பட்டது போன்ற சிலை. அதில் அடிக்கப்பட்டு இருந்த பெயிண்ட் மங்கிப் போய் இருந்தது. அந்த சிலையின் முன் எங்களை நிற்க வைத்து, திடீரென ஒருவரை திறன்பேசியில் கேமராவை வைக்க சொல்லி எங்களை கூட்டி வந்தவர் பேசத்தொடங்கி விட்டார். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். எங்களை காங்கிரஸ் கட்சி சார்பாக வரவேற்கும் படியாக இருந்தது அவரின் பேச்சு. எனக்கு இந்த அமைப்பின் மீது ஒரு கட்சி சாயல் வந்து விடுமோ என்று அச்சம் மேலெழுந்த படியே இருந்தது. அவர் பேசி முடித்த உடனே உங்கள் கட்சி சார்பாக நாங்கள் இந்த நடைபயணத்தை ...