நேர்வழி விருது விழா 2024
நேர்வழி விருது விழா 2024
அறக்கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்த அமைப்பின் முதல் நிகழ்வாக “நேர்வழி விருது விழா 2024” என்ற பெயரில் இரண்டு நேர்மையான ஊழியர்களை கௌரவிக்கப் போகிறோம். கீழ்கண்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் அவர்களை தேர்ந்தெடுத்தோம்.
நேர்வழி விழாவில் கௌரவிக்கப் போகும் நபர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்கள்,
1. லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்திருக்க கூடாது.
2. குறைந்தது 7 ஆண்டுகள் அந்த பணியில் பணியாற்றியிருக்க வேண்டும்.
3. லஞ்சம் அதிகம் புழங்கக் கூடிய துறையில் பணிபுரிய வேண்டும்.
4. அதிகாரி அளவில் இருக்கக் கூடாது. பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கூடிய கடைமட்ட ஊழியராக இருக்க வேண்டும். குறைவான சம்பளம் வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். (Eg: clerk, head clerk, constable, ward boy)
5. தன்னுடைய பணியை சரியாக முடிப்பவராக இருக்க வேண்டும்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்களுடைய நண்பர் வட்டங்களில் விசாரிக்கத் தொடங்கினோம். விருதாளர்கள் இருவர் பற்றி தெரிய வந்தது. பின்னர், இரண்டாம் கட்ட விசாரணையாக எங்களுக்கு தெரிந்த CBCID நண்பர் மூலம் விசாரித்து இவர்கள் நேர்மையானவர்கள் என்று உறுதி செய்து இவர்களுக்கு விருது அளிக்க முடிவு செய்தோம்.
இவ்வாறு நாங்கள் விசாரிக்கும் போது எங்களுக்கு கிடைத்த இன்னும் சில பரிந்துரைகள்:
1. சாமியப்பன்,
கூட்டுறவு சார் பதிவாளர்,
கோபிசெட்டிபாளையம்.
2. சாதிக் பாட்சா,
கண்காணிப்பு அலுவலர்,
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
காளிங்கராயன் பாளையம், பவானி.
3. விஜயா
ஓய்வு பெற்ற செவிலியர்
திருப்பூர்.
இவர்களில் இருவர் அரசு அதிகாரிகளாக உள்ளனர். ஒருவர் ஓய்வு பெற்று விட்டார். நாங்கள் வைத்துள்ள அம்சங்களான கடைநிலை ஊழியராக இருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு பொருந்தாததால் விருது பெறும் இருவரையும் கௌரவிப்பதற்காக இவர்களை அணுகி ஒப்புதல் பெற்று விட்டோம். விருதாளர்கள் இருவருக்கும் ஒரு அடியிலான காந்தி சிலை விருதாக அளிக்கப்படும். இந்த விருது நேர்மையானவர்களுக்கு நேர்மையானவர்களால் வழங்கப்படுகிறது.
இந்த அமைப்பின் அடுத்த கட்டமாக நாங்கள் தத்தெடுத்து ஆறு மாத காலம் தங்கி பணிபுரியப் போகும் கிராமமான அம்மாபாளையத்தில் டிசம்பர் 12, 2024 அன்று அந்த ஊர்மக்களுடன் இணைந்து இவ்விழாவை நடத்தினோம் . இதே கிராமத்தில் தான் விருதாளர்களில் ஒருவர் பணிபுரிகிறார். இதை ஓவ்வொரு ஆண்டும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
ஜெயமோகன் உரை: https://youtu.be/7OHLqb-BGHo?feature=shared
நேர்வழி விருது விழா புகைப்படங்கள்: