Posts

Showing posts from January, 2026

450 கிமீ நடைபயணம் - 9

Image
கடும் குளிர். காலை எழுவதற்கு மிகுந்த சிரமத்துடன் ஒருவழியாக எழுந்தோம். வனத்திற்கு அருகில் இருப்பதால் இந்த குளிர் இருக்கலாம். எழுந்து தயாராகி சிட்டிலிங் நோக்கி நடக்கத் தொடங்கினோம். இன்று மதிய உணவும் ஓய்வும் இல்லை என்பதால் காலை தும்பலில் சாப்பிட்டுவிட்டு தேவையான திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு நடந்தோம். வனத்தை விரைவாக கடக்க வேண்டும் என்று தும்பலில் குறைவாகவே பிரச்சாரம் செய்தோம். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இங்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது. மலை அருகில் உள்ள கிராமம் என்பதால் இங்கு வாக்குக்கு பணம் பெற கூடாது என்று சொன்னால் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன்.  கொஞ்ச நேரத்தில் வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டோம். இரண்டு புறமும் மரங்கள். இரண்டு எல்லைகளிலும் மலைகள். விட்டு விட்டு கிடக்கும் நிழல்களின் ஊடாக நடந்து சென்றோம். சாலை ஓரங்களில் இருக்கும் வரண்ட சேற்று மண்களில் காட்டெருமைகளின் குளம்படி அச்சுகள் இருந்தன. அதைக்காட்டி அர்ச்சனாவையும் லைலா பானுவையும் பயமுறுத்திக் கொண்டு நடந்து சென்றோம்.  குடை போல் மூங்கில் சூழ்ந்து நின்று கொண்டிருந்தது. ஒரு பிரிவின் அருக...

A walk without anticipation - Laila banu

Image
Today was different from before – a long day. I reached our stay at Suruttal around 12:45 a.m. I returned from my college in Gobi, where I had gone to avail my laptop. So I felt two days bunched up into one, without rest. The day after bus travel is usually exhausting, but surprisingly, during today’s walk I was energetic – like realizing the preciousness of a thing once lost. We started this walking trail 18 days ago. Last year we walked 400 km in 18 days. These two sets of 18 days are not the same. Last year I was energetic and alert, and my mind was filled with doubt and novelty. This year it was silence and clarity. Even with uncertainty about our stay, there was a stillness and a hope that somehow we would get one. Last year, during every day’s walk, I was following Google Maps for kilometers, photographing places that were beautiful, and the anticipation of completion was high. This year, the act of walking itself became more significant than the completion. ...

A walk with solitude - Laila banu

Image
The morning light was yet to reach the room where we were sleeping, but the familiar voices of my friends, whom I had not seen for days, reached my ears. Nirmal and Ilakkiya. Nirmal’s voice, which was always filled with subtle energy, caught my attention first. I did not bother to open my eyes but listened to what they were speaking about. They were discussing the water problem in the restroom. I opened my eyes and sat up while the windows shined blue. Then Sibi told us that they had asked someone to switch on the motor. It was only 18 kms today, and we started to get ready slowly. We packed our luggage and took our raincoats with us. The sky was cloudy and pleasant, a state where there was neither sun nor rain. We met fewer people, but there was an expanse of open fields. We nine members walked along the narrow roads towards Septankulam. Today’s walk was different from the couple of weeks prior. Nine members walking together. In this walking trail, I am the one who walked ...

450 கிமீ நடைபயணம் - 8

Image
காலை எழுந்ததில் இருந்து அரச்சனாவும், தீபியும் சற்று முகம் வாடியே இருந்தார்கள். தீபி பிரிந்து செல்வது அர்ச்சனாவிற்கு ஏற்க முடியாததாகவும், உடல் வற்றிப்போகும் படியும் செய்திருந்தது. இருவரும் கையை இருக கோர்த்துக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்தனர்.  மீண்டும் இரவு நடந்த அதே வற்றிய ஆற்றின் வேறு புறம் வழியாக மூன்று கிமீ நடந்தவுடன் ஒரு பிரதான சாலையில் இணைந்தோம். அங்கு ஒரு கடையில் டீ குடித்துவிட்டு தீபி பூபாலன் அவர்களுடன் பிரிந்து சென்றாள். அனைவருக்கும் வருத்தம் இருந்தது. எனக்கும் இருந்தது. ஒரு உறவு மெல்ல தேய்ந்து கரையும் நிலையை உணர்ந்தேன். ஒரு வெள்ளைச் சட்டையில் பட்ட கறை என்ன ஆனாலும் விடமாட்டேன் என்ற நிலையில் இருந்து ஒருகட்டத்தில் மெல்ல அழிந்து மறைவது போல். எந்தப் பிரிவும் வலியானதும் கூடவே கடந்து செல்லக் கூடியதும் தான்.  அபாரமான புறவெளிக்காட்சி அனைத்தையும் அழகாக்கி தன்வயப்படுத்திக் கொண்டது. மரங்கள் சாலையின் மீது கவிந்து நிழல்களால் தழுவிக் கொண்டிருந்தது. இரண்டு புறமும் மரமும் அதைக் கடந்து வயலும் அதைக் கடந்து மலைக் குன்றுகளும் அதற்கும் பின்னால் சூரியோதயம் என்ற...

450 கிமீ நடைபயணம் - 7

Image
ஜனவரி 17அன்று காலை 6:30 மணிக்கு நாங்கள் கிளம்பும் முன்னரே நண்பர் கிருஷ்ணா நாமகிரிபேட்டையில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டார். நேற்று பார்த்த சிபிசிஐடி SI குணா இன்று காலையும் வந்து எங்கள் இன்றைய திட்டத்தை கேட்டுத் தெரிந்து கொண்டார். அங்கிருந்து மன்னார்பாளையம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம் நோக்கி.  ஓடற்ற நீண்ட நத்தை போல் அசையாமல் கிடக்கும் நீண்ட நேர்கோட்டுச் சாலை. அதில் நாங்கள் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். நாங்கள் நடப்பதை விட மெதுவாகவே இங்கு மாற்றம் நிகழும். அந்த தருணத்தில் ஒரு மலைச்சிகரத்தில் விளக்கேற்றுவது போல் வானம் புலரத் தொடங்கிறது. ஒரு சிறு தீற்றலாக தொடங்கி வானமும் நிலமும் எல்லாமும் மெல்ல மெல்ல ஒளி பெற தொடங்கியது. எதுவுமற்ற வெளிச்சம் மெல்ல உருக்கொண்டு ஆதவன் விண்ணில் எழுந்து வருவதை நாங்கள் அசைவின்றி நின்று பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒவ்வொரு சூரியோதயமும் புதிது, பிரிதொன்றில்லாதது. ஆனால் எல்லாமும் ஒன்றே. எப்போதும் ஒன்றே. இன்று அப்படி என்றென்னைக்கும் இருக்கும் ஒன்றின் வேறு கோணத்தை நாங்கள் பார்த்தோம்....

450 கிமீ நடைபயணம் - 6

Image
இன்று 4:30 மணிக்கே அனைவரும் எழுந்து கிளம்பத் தொடங்கினாலும் நாங்கள் தங்கிய மகாலில் ஒரேயொரு கழிவறையே இருந்ததால் நடக்கத் தொடங்க 6:50 மணி ஆகிவிட்டது. அம்மா காலை 6:30 மணிக்கு கிளம்பி திண்டுக்கல் சென்றார். காலை 9 மணிக்குள் ஐந்தாறு கிலோமீட்டர்கள் தான் நடந்திருந்தோம். நல்லோர் வட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவலீலா ஜோதி என்பவர் எங்களை பார்க்க வந்தார். நானும் தீபியும் முன்னால் சென்று கொண்டிருந்தோம். அவர் வந்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு தீபியை அணைத்து முத்தமிட்டார். பெரும் களிப்பில் எங்களை காண வந்திருந்தார். அவருடைய கணவர், நண்பர் ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார்.  அவருடைய வண்டியை எடுத்து வரும்படி நண்பரிடம் சொல்லிவிட்டு எங்களுடன் நடக்கத் தொடங்கிவிட்டார். ஒவ்வொருவரை பற்றியும் விசாரித்துக் கொண்டு வந்தார். கொஞ்ச நேரம் நடந்த பின் எங்களை முன்னால் அம்மன் மெஸ் என்கிற கடைக்கு வரும்படி சொல்லிவிட்டு அவர் மீண்டும் வண்டியில் சென்றுவிட்டார்.  ஒரு அரைக் கிலோமீட்டர் நடந்தவுடன் நல்லோர் வட்டத்தை சேர்ந்த காந்திமதி என்பவர் எங்களை பார்க்க வந்தார். எங்களுடன் நடக்க வேண்டும் என்று அவர் வந...