Posts

Showing posts from December, 2025

விருதாளர் குருசாமி நேர்காணல்

Image
 குருசாமி நேர்காணல்  குருசாமி அத்தானியில் மின்வாரியத் துறையில் ஃபோர்மேனாக பணி புரிந்து வருகிறார். இதற்கு முன் நம்பியூர் போன்ற வெவ்வேறு பகுதிகளில் பணிபுரிந்து உள்ளார். தற்போது கோபி அருகே வெள்ளாளபாளையம் என்னும் ஊரில் வசிக்கிறார். லைன் மேனாக பணியை தொடங்கிய இவர் தொடக்க காலத்தில் அலுவலக செலவுகளுக்காக எதிர்கொண்ட நெருக்கடிகளையும் அதை சமாளிக்க நேர்ந்த சறுக்கல்களையும் இந்த பேட்டியில குறிப்பிட்டு உள்ளார்.  குருசாமியுடன் முனை அமைப்பினர்  1.நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன? எனக்கு கர்வமாக தான் உள்ளது. நான் அடிப்படையிலேயே நேர்மையானவன். கடந்த கால சூழலே நான் இவ்வாறு இருப்பதற்கு காரணம்.இதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். 2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன? ஊரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நான் தனித்து நிற்பதால் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நான் வேறு அரசு அலுவலகமோ அல்லது கடைகளுக்கோ சென்றால் என்னை வேகமாக தாட்டியுட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை எல்லாம் கடந்து போக வேண்டும்.   தவறான செயல்களை என்னை செய...

விருதாளர் சொக்கலிங்கம் நேர்காணல்

Image
  சொக்கலிங்கம் நேர்காணல்  சொக்கலிங்கம் தற்போது சத்தியமங்கலத்தை தாண்டி உள்ள மலைத் தொடரில் தாளவாடி என்னும் ஊரில் வருவாய் துறையில் நிலஅளவராக பணிபுரிந்து வருகிறார். அவர் 2022 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்து அந்தியூர், கோபி போன்ற வெவ்வேறு ஊர்களில் இதற்கு முன் பணியில் இருந்து உள்ளார். இப்போது வசிப்பது பவானி அருகே குமாரபாளையம்.  சொக்கலிங்கம், சர்வேயர்  1. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன ?    நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்குப் பெரும் அகத்தடையாக இருப்பது பிற மனிதர்களின் செல்வாக்கு   ஆகும். அன்றாடப் பணிகளில் நாம் சந்திக்கும் நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நம்முடைய குணாதிசயங்களை மாற்றும் வகையில் நம்மைத் தூண்டுகிறார்கள். குறிப்பாக , மற்றவர்கள் சட்டவிரோதமாகப் பணம் ஈட்டுவதைக் காணும்போது , அது ஒருவரைத் தன் நேர்மையிலிருந்து பிறழச் செய்யும் அகத்தடையாக மாற வாய்ப்புள்ளது. 2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன ? புறத்தடை என்று பெரிய அளவில் ஏதுமில்லை ; இருப்பினும் ஒரு பணியைச் செய்ய மறுக்கும்போது அத்துறையைச்...