400 கி.மீ நடைபயணம்

400 கி.மீ நடைபயணம் 

வாக்குக்கு பணம் என்பது தமிழகம் முழுக்கவே உள்ளது. மக்களிடத்தில் இது போன்ற ஊழல் மண்டிக் கிடக்கிறது. அது ஒட்டுமொத்த சமூகத்தின் நேர்மையை கேள்வி கேட்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெரும்பாலானவர்கள் அதை ஊழல் என்றே உணர்வது இல்லை. சிலர் அவர்களுக்கு இருக்கும் குற்ற உணர்வை மறைப்பதற்காக தங்களுக்கு தாங்களே நொண்டி சாக்குகளை சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு எதிராக ஒரு இயக்கமாக செயல்பட்டு முற்றிலும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் பெருந்தலையூர் என்னும் கிராமத்தில் 2024 மக்களவை தேர்தலில் இந்த ஊழலுக்கு எதிரான ஒரு ஒன்றரை மாதம் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் 75 சதவீதம் பேர் பணம் வாங்காமல் இருந்து அதில் வெற்றியும் கண்டுள்ளோம். பெருந்தலையூர் பணி  

11.01.2025 முதல் 28.01.2025 வரை 18 நாட்கள் இதே நோக்கத்தை முன்வைத்து காந்தி வந்து தங்கி இன்று அவருடைய நினைவாகமாக உள்ள கோவை பொத்தனூரில் தொடங்கி திண்டுக்கல் காந்தி கிராமம் வழியாக ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யம் வரை மொத்தம் 400 கிலோமீட்டர் நடந்து பிரச்சாரம் செய்துள்ளோம். இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இந்த 400 கிலோமீட்டரையும் முழுவதுமாக நடந்து உள்ளோம். சில நண்பர்கள் ஒரு நாள், ஐந்து நாள், ஒரு வாரம் என்று பகுதி நேரமும் நடந்து உள்ளனர். இந்த பாதயாத்திரையின் ஒற்றை பிரச்சாரம் "இது காந்தியின் தேசம் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்" என்பதே. அனைவரும் ஒரே மாதிரி காந்தி படம் போட்ட மேலாடை அணிந்து நடந்து சென்றோம். இந்த நடை பயணத்தின் இன்னொரு முக்கியமான நோக்கம் கடைகளில் சாப்பிட்டு ஹோட்டல்களில் தங்கி செல்லாமல் பொது மக்களின் உதவியுடன் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு அவர் அளிக்கும் இடத்தில் தங்கி செல்ல வேண்டும் என்பது. பதினெட்டு நாள் இரவும் அது போல் மக்களின் வீடுகளில், மண்டபங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், கோவில்களில் என்று பல்வேறு இடங்களில் தங்கி உள்ளோம். பதினெட்டு நாளில் வேறு வழியே இல்லாமல் கடையில் கடையில் சாப்பிட்டது அதிகபட்சம் ஆறு வேளை இருக்கும். 

தமிழக மக்கள் எங்களை கை விட்டு விட மாட்டார்கள் என்று நம்பி இந்த பயணத்தை மேற்கொண்டோம். அவ்வாறே நடந்தது. மக்கள் செய்யும் செயலை எதிர்த்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு மக்களிடம் இருந்து இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்ததே தமிழகத்திற்கு ஒரு வெற்றி என்றே பார்க்கிறோம். 

போத்தனூரில் பயணம் தொடங்கிய காந்தியவாதி கண்ணன் தண்டபாணி ஒரு உரை நிகழ்த்தி எங்கள் பயணத்தை தொடங்கி வைத்தார்.  அங்கு சுமார் 30 பேருக்கு மேற்பட்டோர் வந்து கூடி இருந்தனர். அனைவரும் கொஞ்ச தூரம் எங்களோடு நடந்து வந்தனர். இறுதி நாள் அன்று வேதாரண்யத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக எங்களுக்கு "ஆறு லட்சம் காலடிகள் விழா" என்ற பெயரில் ஒரு நிறைவு விழாவும் நடத்தப்பட்டது. அதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், பேராசிரியர் பழனிதுரை ஆகியோர் வந்து எங்களை வாழ்த்தி இருந்தனர். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் கையொப்பமிட்ட சான்றிதழும் எங்களுக்கு வழங்கப் பட்டது. 

இந்த பயணம் ஒரு அடையாள அடிப்படையில் தொடங்கப்பட்டது. மக்களின் இந்த ஊழலை பேசு பொருளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் கண்ணெதிரே சிலர் மாறுவதாக சொன்னார்கள். இதை ஒரு தொடர் இயக்கமாக ஆண்டு தோறும் மேற்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு உண்டு. இந்த நடைபயணத்தின் ஒவ்வொரு நாள் அனுபவத்தையும் எழுதியுள்ளேன். 

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

நான்காம் மற்றும் ஐந்தாம் நாள்

ஆறாம் நாள்

ஏழாம் நாள்

எட்டாம் நாள்

ஒன்பதாம் நாள்

பத்தாம் நாள்

பதினொன்றாம் நாள்

பன்னிரண்டாம் நாள்

பதிமூன்றாம் நாள் - 1

பதிமூன்றாம் நாள் - 2

பதினான்காம் நாள்

பதினைந்தாம் நாள்

பதினாறாம் நாள்


 பங்கேற்பாளர்கள்:

1. சிபி, completed BBA on April 2024, Gobi arts and science college. 

அலைபேசி: 63835 69741 



2. அனு ஸ்ரீ, முதலாமாண்டு LLB, SKP சட்டக் கல்லூரி, திருவண்ணாமலை.  

அலைபேசி: 90251 65842 


 

3. சௌமியா ஸ்ரீ, முதலாமாண்டு LLB, அரசு சட்டக் கல்லூரி, கோவை. 

அலைபேசி: 99657 04414 



4. அர்ச்சனா, இரண்டாம் ஆண்டு இளங்கலை கணிதம், சிக்கண்ணா கலைக் கல்லூரி. 
அலைபேசி: 96007 05171 



5. லைலா பானு, இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளியல், கோபி கலைக் கல்லூரி. 

அலைபேசி: 98944 64092 


6. கௌதம், completed Bsc. Maths on April 2024, Gobi arts and science college. 

அலைபேசி: 63748 79199



பிரச்சார நோட்டீஸ் 


சிபி,
முனை இளைஞர் சங்கம். 


Comments

  1. ஆச்சரியமாகவும் மனநிரைவாகவும் உள்ளது உங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்
    நன்கொடைக்கு வங்கி கணக்கு குறிப்பிடவில்லை

    முனை அமைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  2. அருமையான முயற்சி. தங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். முனை அமைப்பு மென்மேலும் பல சிறப்புகள் பெறட்டும்.

    ReplyDelete
  3. பயணம் சிறக்கட்டும். எடுத்த பணி சிறப்பு.
    வாழ்த்துக்கள்.
    பயணத்தில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  4. All the very best, take care and safe travel

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்